நடிகர் சிம்புவின் வானம் திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் இயக்குனர் கிரிஷ் தற்போது இரண்டாம் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இந்த விஷயம் தான் தற்போது திரைத்துறை வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதாவது மருத்துவர் பிரீத்தி சல்லா என்ற பெண்ணை தான் க்ரிஷ் ரகசியமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது இந்த திருமணம் ஹைதராபாத்தில் நடந்து முடிந்த நடந்து முடிந்திருக்கிறது.
அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னதாக ரம்யா என்ற மருத்துவர் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் ஆன இரண்டே வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள் .
ஒரு நடிகையுடன் இருந்த ரகசிய தொடர்பு காரணமாக இவர்கள் பிரிந்ததாக அப்போதே செய்திகள் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. விவாகரத்துக்கு பிறகு திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து வந்த க்ரிஷ் தற்போது திடீரென ரகசியமாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 16-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. புது மனைவி ஹீரோயின் போல மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். ப்ரீத்தி சல்லா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவராம். அவருக்கு 11 வயதில் ஒரு மகன் இருப்பதாக தகவல்கள் கூறுகிறது.