சூர்யா நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பாதனி முதன் முதலில் ஹீரோயினாக நடிக்கிறார்.
நவம்பர் 14ஆம் தேதி இந்த திரைப்படம் உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது. இதற்கான ப்ரொமோஷன்கள் தற்போது படு தீவிரமாக படக்குழு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் பிரமோஷனுக்காக சூர்யா, தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணாவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுவாரஷ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
Also Read : புஷ்பா 2: சமந்தா வேண்டாம்… சென்ஷேஷ்னல் நடிகையின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம்!
அப்போது போன் காலில் பேசிய கார்த்தியிடம், சூர்யாவின் கிரஷ் யார் என்று பாலைய்யா கேட்க…. அதற்கு கார்த்தி, சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே என்ற பழைய பாடல் இருக்கிறது. அதில் நடித்த நடிகை தான் சார் என்று கூறியிருக்கிறார்.
அதற்கு சூர்யா நிறுத்து கார்த்தி என்று கூற அதற்குள் எல்லோரும் யூகித்து கெளதியா என்று கேட்டுள்ளார் பாலகிருஷ்ணா. அதற்கு சூர்யா நீ கத்திடா கார்த்தி கிடையாது என்று சிரித்தபடி போட்டுக்கொடுத்ததற்கு ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் இது ஜோதிகா அண்ணிக்கு தெரியுமா? என்ற கேள்வி எழுப்பி வருகிறார்கள்