தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் தனக்கென தனி இடத்தையும் அடையாளத்தையும் தக்க வைத்துக் கொண்டிருப்பவர் தான் எஸ் ஜே சூர்யா. நடிகர் , இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், உள்ளிட்ட பல துறைகளில் தன்னை ஜொலித்துக் கொண்டு தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வருகிறார்.
முதன் முதலில் அஜித் நடிப்பில் வெளிவந்த வாலி திரைப்படம் ஜே சூர்யாவின் கரியரில் மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது. தொடர்ந்து குஷி. நியூ. அன்பே ஆருயிரே. இசை போன்ற சில திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டார் .
Also Read : விவாகரத்து பற்றி பேசிய விக்னேஷ் சிவன் – சட்டென அதிர்ச்சி அடைந்த நயன்தாரா – வீடியோ!
மேலும், நடிகராக இவர் பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி இருக்கிறார். மெர்சல், மாநாடு ,டான், வாரிசு, மார்க் ஆண்டனி, இந்தியன் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் .
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் எஸ் ஜே சூர்யா தான் கடந்து வந்த பாதை குறித்து பேசி அனைவரையும் வருத்தத்திற்கு உள்ளாக்கினார். அதாவது நான் ஹோட்டலில் சர்வராக வேலை பார்க்கும்போது கூட ஐயோ என்னோட இது? நம்ம போற இடம் வேற ஆச்சே… இங்க வந்து டேபிள் தொடச்சிட்டு இருக்கேனே அப்படின்னு நினைக்காத ஒரு ஆள் தான் நான்.
அன்னைக்கு டேபிள் துடைப்பது என்னுடைய வேலையாக இருந்தது. அதை நான் மிகச் சரியாக செய்தேன். நான் அப்படி இப்படி ஆகணும் என்கிறது அப்புறம். இன்னைக்கு எனக்கு கொடுக்கிற கதாபாத்திரத்தை நான் சரியா செய்யணும். என்னோட சிறந்த நடிப்பை அதில் கொடுக்கணும். அப்படின்னு நான் முனைப்போடு நெனச்சிட்டு வரேன். எனவே நான் எந்த வேலையாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்பவன். அதை அலட்சியமாக நினைக்க மாட்டேன். அதனால் தான் எனக்கு சினிமா இப்படி ஒரு இடத்தை கொடுத்திருக்கிறது என கூறினார் எஸ்.ஜே சூர்யா.