தமிழ் சினிமாவில் தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலமாக தனது திரைப்பயணத்தை துவங்கினார். பின்னர் நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம் , நானும் ரவுடிதான், சேதுபதி, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக விஜய் சேதுபதி பார்க்கப்பட்டு வருகிறார் .
இதனிடையே ஹீரோவாக நடித்து வந்த அவர் திடீரென வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரள செய்தார். வில்லன் கதாபாத்திரத்திலும் வெளுத்து வாக்கிய விஜய் சேதுபதி ஆல் ரவுண்டராக பார்க்கப்பட்டார் .
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சமீபத்திய பேட்டி ஒன்றிய தனது தந்தை குறித்தும் அவருடனான உறவு குறித்தும் வெளிப்படையாக பேசி இருக்கிறார் .
அப்போது பேசிய சூர்யா நான் தவறுதல் செய்திருந்தால் கூட அந்த தவறை இரண்டு கோணத்தில் என்னுடைய தந்தை பார்க்கச் சொல்வார். அதில் ஒன்று எனக்கு எது சரியானது என்று படுகிறது…. எனக்கு எது சரியில்லை என தோன்றுகிறது இது ரெண்டுமே உன்னோட சாய்ஸ் தான். இதில் நீ எதை தேர்ந்தெடுக்கிறாயோ அதுவாக தான் நீ இருப்பாய் என என்னுடைய தந்தைக்கு அறிவுரை கூறுவார் என தத்துவ மழை பொழிந்த விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவின் பேச்சை கேட்டு விஜய் சேதுபதி கொஞ்சம் அப்படி இப்படி நெளிச்சலோடு அமர்ந்து கொண்டிருந்தார் .
நான் தவறான விஷயத்தை என்னோட முடிவா எடுத்தாலும்… சரியான விஷயத்தை என்னோட முடிவா எடுத்தாலும் அவர் எதுவும் சொல்ல போறது கிடையாது. அது உன்னோட வாழ்க்கை நீ தான் பார்த்துக்கணும் என்று தான் என்னுடைய தந்தை அறிவுரை கூறுவார் என சூர்யா அந்த பேட்டியில் பேசியிருந்தார். இந்த தத்துவத்தை கேட்டு விஜய் சேதுபதியே கொஞ்சம் சலித்து போனது போல் தான் ரியாக்ஷன் கொடுத்திருந்தார்.