பாலிவுட் பாஷா என அழைக்கப்படும் ஷாருக்கான் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து உலக அளவில் பிரபலமான நடிகராகவும் டாப் பணக்காரர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார் .
இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜவான் திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படம் பல கோடி வசூலை ஈட்டி பல கோடி லாபத்தையும் அவருக்கு கொடுத்தது.
அடுத்ததாக தற்போது லயன் திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சிக்குரிய தகவல் கிடைத்திருக்கிறது.
அதாவது இன்றைய தினம் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. அந்த கொலை மிரட்டலின் பின்னணியில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சிக்குரிய சம்பவம் கிடைத்திருக்கிறது.
அதாவது 50 லட்சம் ரூபாய் பணத்தை கேட்டு சாருக் கான் வீட்டுக்கு ஒரு போன் காலில் கொலை மிரட்டல் அழைப்பு வந்திருக்கிறது .
அது பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பணம் பறிக்க முயற்சி என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பிறகு அந்த கால் ட்ரேஸ் செய்தபோது சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் சேர்ந்த முகம்மது பைஜான் என்ற நபர் தான் போனில் இருந்து கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்திருக்கிறது .
அவர் ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அது பற்றி விசாரிக்க அந்த ஊருக்கு மும்பை போலீசார் சென்றபோது முகமத் பைஜான் கான் தன்னுடைய போன் நம்பர் நவம்பர் 2ம் தேதி தொலைந்து போய்விட்டதாக கூறி இருக்கிறார் .
அது பற்றி போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஷாருகானுக்கு உலக நட்சத்திர ஹீரோவாக இருக்கும் நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் வந்ததை அடுத்து அவருக்கு போலீசார் பலத்த பாதுகாப்பு கொடுத்து வருகிறார்கள் .
இதே போல் முன்னதாக பாலிவுட் சினிமாவின் பிரபல ஹீரோவான சல்மான் கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது .
தொடர்ந்து இப்படி பாலிவுட் டாப் ஹீரோக்கள் அடுத்தடுத்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதால் இதன் பின்னணியில் என்ன நடக்கிறது? என்ற ஒரு கேள்வியும் அச்சமும் பாலிவுட் சினிமாவில் இருந்து வருகிறது.