கமல்ஹாசனின் திரை வாழ்கையில் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்த படம் தான் விருமாண்டி. 2004 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை அபிராமி நடித்திருப்பார் .
இந்த படத்தை கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக இளையராஜா பணியாற்றிருந்தார்.
இந்த திரைப்படத்தில் பசுபதி, நெப்போலியன், ரோகினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள் .
இந்நிலையில் இப்படத்தின் ஸ்வாரசியமான தகவல் ஒன்றை இயக்குனர் ராசி அழகப்பன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
அதாவது, விருமாண்டி படத்தின் கதையும் முழுவதுமாக எழுதி முடித்துவிட்டு படத்திற்கு யாரை இசையமைப்பாளராக போடலாம் என நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது உடனே நான் இளையராஜாவை போடலாம் என்று சொன்னேன்.
கமல் சார் ஏன் என்று கேட்டார். கிராமத்து கதையாக இருக்கிறது. எனவே இளையராஜா தனது இசையால் ரசிகர்களுக்கு அழகாக கடத்திச் சென்று விடுவார் என கூறினேன்.
உடனே கமல்ஹாசன் அதற்கு இளையராஜா சம்மதிப்பாரா? என கேட்டுவிட்டு போய் கேட்டுப்பாருங்கள் என கூறினார்.
நானும் என்னுடைய நண்பரும் இளையராஜாவிடம் சென்று விவரத்தை கூறினோம். உடனே அவர் என்னையா இப்பதான் நான் இருக்கிறது.
உங்கள் கண்ணுக்கு தெரியுதா? நீங்களே நாலு அஞ்சு பேர் வச்சிருப்பீங்களே என கொஞ்சம் லைட்டான கோபத்துடன் செல்லமாக கூறிவிட்டு நாளைக்கு வாங்க என்று சொன்னார் .
முதலில் கதை சொன்னப்போ இளையராஜா சம்மதிக்கவே இல்ல. ஆனால், அவர் சம்மதிக்காததை தான் நாங்க இளையராஜா கிட்ட சொல்லவே இல்ல.
ஏனென்றால் நாங்கள் முதலில் அவரிடம் சண்டை காட்சிகளை மட்டுமே கூறினோம். பின்னர் அந்த கதை அவருக்கு பிடிக்காதால் மீண்டும் நாங்கள் ஒரு முறை கதையை கூறுகிறோம் .
நீங்கள் கேட்டுவிட்டு சம்மதம் தெரிவியுங்கள் அப்படின்னு சொன்னதும் இளையராஜா முழு கதையும் கேட்டுவிட்டு இசையமைக்க ஒப்புக்கொண்டார்.
பின்னர் இளையராஜா படத்தில் ஏற்கனவே இருந்த பாடல்களை விட ஒரு பாடலை எக்ஸ்ட்ராவாக அமைத்துக் கொடுத்தார் என இயக்குனர் ராசி அழகப்பன் அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.