தமிழ் சினிமாவில் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து பின்னர் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து ஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகர் ரகுவரன்.
இவர் தமிழ், மலையாளம் ,ஹிந்தி ,தெலுங்கு உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக சினிமாவால் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வந்தார்.
குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்த பாட்ஷா, முதல்வன், ரட்சகன், முகவரி, சம்சாரம் அது மின்சாரம், ஏழாவது மனிதன் சில திரைப்படங்கள் மாபெரும் வெற்றி திரைப்படங்களாக பார்க்கப்பட்டது .
மேலும் அந்த திரைப்படங்களில் அவரது அசாத்தியமான நடிப்பு இன்றுவரை ரசிகர்களின் பிரபலமான காட்சியாகவும் பார்க்கப்படுகிறது.
இவர் பிரபல நடிகையான ரோகிணியை காதலித்து 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.
இதனுடையே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2004 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.
இப்படியான நேரத்தில் மனைவியை பிரிந்த பிறகு ரகுவரன் மிகுந்த மோசமான மனநிலைக்கு தள்ளப்பட்ட தள்ளப்பட்டதாக செய்திகள் கூறுகிறது .
அதாவது மனைவியை பிரிந்து மகன் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து வந்த ரகுவரன் குடிபோதைக்கு அடிமையாகி கிட்டத்தட்ட மனநோயாளியாகவே மாறிவிட்டாராம்.
ரகுவரன் காலில் ஒருமுறை பயணித்துக் கொண்டிருக்கும் போது சிக்னலில் சிறுவர்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்து என்னுடைய பிள்ளையும் இதுபோல் எங்கேயோ பிச்சை எடுத்துக் கொண்டிருப்பானோ?
நான் அவர்களை தவிக்க விட்டு விட்டேனா? என்று ஒரு பயத்தோடு ஓடிப் போய் தன்னுடைய மகனை பார்த்ததாக கூறுகிறார்கள் .
அந்த அளவுக்கு தனிமை அவரை வாட்டியதாகவும் மனைவி மற்றும் பிள்ளைகளின் பிரிவு அவரை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியதாம் .
இதனால் அவர் கிட்டத்தட்ட மன நோயாளியாகவே கடைசி கட்டத்தில் மாறியதாக செய்திகள் கூறுகிறது. இதனுடையே ரகுவரன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2008 ஆம் ஆண்டு மரணம் அடைந்து விட்டார்.
கணவரின் மறைவுக்குப் பிறகு நடிகை ரோகிணி தொடர்ந்து திரைப்படங்களில் சிறப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.