அரசியல் வட்டாரத்தில் தற்போது சீமான் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரான விஜய் இருவருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டிருக்கிறது. விஜய் அரசியலுக்கு வந்த புதிதில் சீமான் பெரும் ஆதரவு கொடுத்து வந்தார்.
அவரை தம்பி என்றும் ஒவ்வொரு அரசியல் கட்சி கூட்டத்திலும் வழிமொழிந்து பேசி வந்த சீமான் விஜயின் மாநாட்டிற்கு பிறகு அவரை கடுமையாக விமர்சித்து சாடி வருகிறார். விஜய் மாநாட்டில் கத்தி கத்தி கூப்பாடு போட்டு புரட்சி செய்ய நான் இங்கு வரவில்லை.
அது எனக்கு செட்டும் ஆகாது என மறைமுகமாக சீமானை தாக்கி பேசியிருந்தார். அதன் பிறகு பத்திரிகையாளர்கள் பலரும் விஜய் உங்களை இப்படி பேசிவிட்டார் என சீமானிடம் கேள்வி எழுப்பிய போது தம்பியும் இல்லை அண்ணனும் இல்லை என சீமான் ஒரே போடாக போட்டு விஜய்க்கு எதிராக மாறத் தொடங்கினார்.
இந்த நிலையில் தொடர்ச்சியாக விஜய் குறித்து அவதூறு பேசி வருகிறார். நடிகர் சீமான் அது குறித்து சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் .
அதாவது நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென்று அந்நியனாகவும் மாறுவார் திடீரென்று அம்பி ஆகவும் மாறுவார் இதற்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை. விஜய்யை ஏன் அவர் முன்னர் தம்பி என்று சொன்னார்? பிறகு ஏன் லாரியில் அடிபட்ட சாகணும் என்று சொல்கிறார்? எல்லாவற்றிற்கும் அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.
Also Read : உமா ரியாஸ் மாமியார் கொடுமை செய்கிறார்…. மரியா பகிரங்க பேட்டி!
எப்போதும் ஒரே நிலைப்பாடோடு இருக்க வேண்டும். எல்லோருக்கும் பேசுகின்ற சக்தியை கடவுள் வழங்கி இருக்கிறார். அதற்காக நாம் வாய்க்கு வந்ததெல்லாம் பேசக்கூடாது என்கிற கருத்தை மட்டும் தான் சொல்கிறேன் என பிரேமதா விஜயகாந்த் கூறியுள்ளார்.