80 காலகட்டங்களில் வெளிவந்த படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி மிகப்பெரிய அளவில் பேமஸான நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை டிஸ்கோ சாந்தி.
டிஸ்கோ சாந்தி ரசிகர்களின் கில்மா நடிகையாக மனம் கவர்ந்து வந்தார். இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடனமாடியும் நடித்தும் இருந்தார்.
தமிழ், கன்னடம், ஹிந்தி ,தெலுங்கு உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் டிஸ்கோ சாந்தி பிரபல படம் நடிகரான ஆனந்தின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது .
சாந்தி 7 வயதிலேயே சினிமாவில் நடிக்க துவங்கி ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் ஆடி வந்தார். டிஸ்கோ சாந்தி 1996 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான ஸ்ரீஹரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
Also Read : சமந்தா NO சொல்லிட்டாங்கன்னு வருத்தப்படாதீங்க… “புஷ்பா 2″ல் ஆட்டம் போட்ட சென்ஷேஷ்னல் நடிகை!
ஹைதராபாத்தில் செட்டில் ஆகி இருந்த டிஸ்கோ சாந்தி தனது மகன்களை வளர்ப்பதில் அதிக கவனத்தை செலுத்தி வந்த சமயத்தில் அவரது கணவர் கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்துவிட்டார்.
கணவர் இறந்த பிறகு அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வந்த டிஸ்கோ சாந்தி மன அழுத்தத்தால் தினமும் குடித்து கணவரை நினைத்து நினைத்து வருந்தி வந்ததாக கூறுகிறார் .
மேலும் நான் குடிபோதையில் வீட்டிற்கு கூட வராமல் என்னுடைய கணவரின் கல்லறையிலே படுத்து கிடந்தேன். இரண்டு வருடங்களாக என்னுடைய வாழ்க்கை இப்படித்தான் போனது.
எனக்கு எதுவுமே பிடிக்கவில்லை. குடிக்ககு அடிமையாகி வாழவே பிடிக்காமல் நான் கிடந்தேன் என டிஸ்கோ சாந்தி மிகுந்த வேதனையோடு கூறினார்.
மேலும் என்னுடைய கணவர் இறந்தபோது அவருடைய வாங்கி கணக்கில் ரூ.15 ஆயிரம் தான் இருந்தது. என் வீட்டு செலவுக்கு ஒரு வேலை சாப்பாட்டுக்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.
அது மட்டும் இல்லாமல் என்னிடம் பணம் இல்லாத நேரத்தில் நான் வாங்கி வைத்திருந்த இரண்டு மூன்று இடங்களை விற்று அதில் கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு போய் வங்கியில் போட்டு அதன் மூலம் கிடைத்த வட்டி படத்தை வைத்து தான் நாங்கள் சாப்பிட்டு குடும்பத்தை நகர்த்தி வந்தோம்.
வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறோம் என்ற ஒரு தெளிவே இல்லாமல் மிகுந்த பயத்தோடு வாழ்க்கையை நடத்தி வந்தேன்.
பின்னர் என்னுடைய குழந்தைகளுக்காக என்னுடைய கவலைகளை தூக்கிப்போட்டு அவர்களுக்காக வாழ ஆரம்பித்தேன் என டிஸ்கோ சாந்தி அந்த பேட்டியில் மிகுந்த வேதனையோடு தெரிவித்திருக்கிறார்.