தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து வந்த நடிகர் விஜய் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்திருந்தார் .
இந்த திரைப்படம் உலகம் முழுக்க கிட்டத்தட்ட ரூ. 450 கோடி வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்திருந்தது. அதை அடுத்து தற்போது கடைசியாக தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா நடிக்கிறார் .
இந்த திரைப்படம் தான் விஜயின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதை அடுத்து விஜய் முழு நேர அரசியலில் இறங்க இருக்கிறாராம்.
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் சமீபத்தில் தான் மிகப்பெரிய முதல் மாநில மாநாடு நடத்தி சிறப்பாக முடித்தார்.
இந்த நிலையில் மாநாட்டில் விஜய் பேசியது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை நமீதா அதை விமர்சித்திருக்கிறார் .
அது குறித்து அவர் கூறியதாவது விஜயின் அரசியல் வரவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், வீணாக பல விஷயங்களை அவர் பேசிக்கொண்டே இருக்காமல் செயலில் எல்லா விஷயத்தையும் செஞ்சு காட்ட வேண்டும்.
அதுதான் மக்களுக்கும் அவருக்கும் நல்லது என நமீதா பேசியிருக்கிறார். நமீதாவின் இந்த பேச்சு விஜய் தொண்டர்களையும் ரசிகர்களையும் கொந்தளிக்க செய்திருக்கிறது .
நடிகை நமிதா தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக தற்போது செயல்பட்டு வருகிறார். இவர் விஜயுடன் சேர்ந்து அழகிய தமிழ் மகன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.