தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக உச்ச அந்தஸ்திலிருந்து வந்த நடிகர் விஜய் தன்னுடைய கேரியரை உதறி தள்ளிவிட்டு கோடியில் சம்பளம் வாங்கிருந்தாலும் அது கூட தேவையில்லை என்னை வளர்த்துவிட்ட மக்களுக்காக ஏதேனும் செய்யவேண்டும் என நினைத்து அரசியலில் இறங்கியதாக முன்னதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது முழு நேர அரசியலில் இறங்கி இருக்கிறார். தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய கட்சியின் முதல் மாநாடாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையில் நேற்று மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தமிழக வெற்றிக்கழகம் மாநாட்டில் பேசிய கட்சியின் தலைவர் விஜய் கட்சியின் கொள்கைகளை வெளியிட்டார் . மேலும் பாஜக தனது சித்தாந்த எதிரி எனவும் திமுக தனது அரசியல் எதிரி எனவும் தெரிவித்து அதிர வைத்தார்.
பல விஷயங்களை குறித்து வெளிப்படையாக பேசியிருந்த நடிகர் விஜய்க்கு திமுக தான் தனது அரசியல் எதிரி என பேசியது. அவரின் அரசியல் நோக்கத்தை வெளிக்காட்டியது. ஆம், ஊழலை அறவே ஒழிக்க பாடுபடுவேன் என கூறியிருந்தார்.
மேலும், இந்த மாநாட்டில் பேசிய விஜய்யின் பேச்சுக்கள் மற்றும் அவரது அரசியல் கோணங்கள் அரசியல் பார்வை உள்ளிட்டவை மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது.
இந்த பிரம்மாண்ட மாநாட்டில் விஜய் முதன் முறையாக பல விஷயங்களை குறித்து நேரடியாகவே தன்னுடைய கருத்தை வெளிப்படையாக பதிவு செய்திருந்தார்.
அப்போது “எங்களை பார்த்து யாரும் விசில் அடிச்சான் குஞ்சு” என்று சொல்லிவிடக்கூடாது என்ற ஒரு வார்த்தையை விஜய் சொல்லி இருப்பார்.
விசில் அடிச்சான் குஞ்சுக்கு என்ன அர்த்தம்? என பலரும் தேடி வந்த நிலையில் அதை மாநாட்டில் கலந்து கொண்ட ஒரு பெரியவர் விசில் அடிச்சா குஞ்சுக்கான அர்த்தத்தை தெளிவான கூறியிருக்கிறார் .
Also Read ; 25 வருஷமாகியும் குறையாத காதல்…. சூர்யாவுக்கு இவ்வளவு பொசசீவ்வா?
அதாவது அந்த காலத்தில் சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜிஆர் இவர்கள் இருவரும் மிகப்பெரிய மாஸ்தான நடிகர்களாக போட்டி போட்டுக் கொண்டு திரைப்படங்களில் நடித்து வந்தார்கள். அந்த சமயத்தில் எம்ஜிஆர் அரசியலில் இறங்கிவிட்டார்.
அந்த காலத்தில் எம்ஜிஆர் ரசிகர்களை தான் விசில் அடிச்சான் குஞ்சு என கூறுவார்கள். ஏனென்றால் எம்ஜிஆர் திரைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் திரையில் விசில் அடித்துக் கொண்டு கொண்டாடுவார்கள்.
அதே சிவாஜி கணேசன் திரைப்படங்கள் வருகிறது என்றால் அவர்தம் திரைப்படங்களை கைத்தட்டி ரசிப்பார்கள். இதுதான் விசில் அடிச்சான் குஞ்சுக்கு அர்த்தம் என அந்த பெரியவர் அந்த மாநாட்டில் தெளிவாக தன்னுடைய கருத்தினை பதிவு செய்திருந்தார்.