தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்து பெருமளவில் பிரபலமானவர் தான் ரியாஸ் கான்.
இவர் 2000 காலகட்டத்தில் வெளியான பல திரைப்படங்களில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
குறிப்பாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டவர்.
கட்டு மஸ்தான உடல் தோற்றத்துடன் 52 வயதாகியும் தற்போது வரை ஆஜானுபாகுவான உடல் தோற்றத்தை வைத்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ரியாஸ்கான் .
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் வெளிவந்த சுறா, ஜெகன் மோகினி, திருப்பதி, கஜினி, வின்னர், பாபா, ரமணா, பர்த்டே உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் உமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இதில் மூத்த மகனான ஷாரிக் பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலமாக தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலமானார் .
ஆனால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரிய அளவில் வரவேற்போ மக்களின் மனதையும் யோ இவர் கவரவில்லை.
மாறாக தற்போது சமீபத்தில் ரியா ரியாஸ்கானின் மகன் ஷாரிக் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு தனது மனைவி மரியாவுடன் பேட்டி கொடுத்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது .
ஷாரிக் தனது நீண்ட நாள் காதலியான மரியா என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார் .
இந்த நிலையில் தற்போது மரியா குறித்த பல விஷயங்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டனர். அதில் மரியா கிட்டதட்ட 45 வயது மதிக்கத்தக்க பெண்.
அவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர். அவருக்கு வயதுக்கு வந்த ஒரு பெண்ணும் சாரா என்ற ஒரு மகளும் இருக்கிறார் .
இப்படி இருக்க 29 வயதான ஷாரிக் மரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கும் விஷயம் தான் அனைவரது கவனத்தை ஈர்த்து இருக்கிறது .
குறிப்பாக அந்த பேட்டியில் ஷாரிக்கின் எண்ணங்கள் மற்றும் அவரது காதல் பயணம் உள்ளிட்டவற்றை கேட்ட ரசிகர்கள் ரியாஸ்கானுக்கு இப்படி ஒரு மகனா என அவரை பாராட்டி வருகிறார்கள் .
அந்த அளவுக்கு ஷாரிக்கின் குணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. கட்டதுரை மிக அருமையான பிள்ளையை பெற்று வளத்திருக்கிறார்.
உங்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் சாரி உங்களது மனைவி மரியாவுடன் நீங்கள் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துக்கள் என பலரும் கூறுகிறார்கள். இதோ அந்த நேர்காணல் வீடியோ: