தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் நடிகை தான் பிரியங்கா அருள் மோகன்.
இவர் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து மிக குறுகிய காலத்திலேயே நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்து இருக்கிறார் .
முன்னதாக முதன்முதலில் கன்னட திரைப்படம் ஒன்றில் நடித்து தமிழ் சினிமா துறையில் அறிமுகமான பிரியங்கா மோகனுக்கு முதல் படம் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
அதை அடுத்து தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை செலுத்த ஆரம்பித்து அவருக்கு ஞானியுடன் சேர்ந்து கேங் லீடர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அவருக்கு மகுடம் சூட்டியது. அதை அடுத்து தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தில் நடித்து முதல் படத்திலே ஏகோபித்த வரவேற்பை பெற்றார் .
அதை தொடர்ந்து சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்தார். பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் திரைப்படத்தின் நடித்திருந்தார் .
அதை அடுத்து தனுஷ் உடன் கேப்டன் மில்லர் போன்ற பல நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து அடுத்தடுத்து நடித்து இன்று பிரபலமான நடிகையாக அனைவரது மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.
இந்நிலையில் தற்போது நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வெளியாக காத்திருக்கும் பிரதர் திரைப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : பிரேமம் படத்தில் நடிக்கவே மறுத்தேன்… காரணத்தை கூறி அதிர வைத்த சாய் பல்லவி!
இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படு தீவிரமாக ஈடுபட்டு வரும் பிரியங்கா அருள் மோகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன் வாழ்க்கையில் நடந்த சோகமான விஷயங்களை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார் .
அதில் அவர் பேசியதாவது ஆண்கள் எப்போதும் தங்களை சார்ந்த பெண்களை டேட்டிங் அழைத்துச் செல்லும்போது அவர்களை மிகவும் சீப்பாக ஃபீல் பண்ண வையுங்கள்.
அப்பதான் அவங்களுக்கு உங்க மீது ஒரு நம்பிக்கையான எண்ணமே வரும். தவறு செய்யாத ஆட்களே யாருமே இல்லை.
எல்லாருமே தவறு செய்தவர்கள் தான். அதை ரிகரெட் பண்ண வேண்டாம் என பிரியங்கா மோகன் மிகவும் வருத்தப்பட்டு அட்வைஸ் கொடுத்திருந்தார் .
இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வரும் பிரியங்கா மோகனுக்கும் ஹார்ட் பிரேக் நடந்திருக்கு என்பதை அறிந்த இளைஞர்கள் சோகத்தில் ஆழ்ந்து விட்டார்கள்.