தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வருபவர் டி இமான். இவர் பல்வேறு திரைப்படங்களுக்கு மிகச்சிறந்த இசையையும் பாடலையும் கொடுத்ததன் மூலமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
குறிப்பாக இவரது திரை பயணம் முதன் முதலில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார்.
முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. ஆம் அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்க துவங்க ரஜினிகாந்த் , சிவகார்த்திகேயன், தனுஷ் , இப்படி பல நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பிரபலமான இசை அமைப்பாளராக பார்க்கப்பட்டு வந்தார் .
இதனடி இமானின் சொந்த வாழ்க்கையில் பல மோசமான சம்பவங்கள் நடந்தது. அதாவது அவரது முதல் மனைவி விவாகரத்து செய்துவிட்டார் .
இப்படி பல பிரச்சினைகளால் சினிமாவில் இசையமைப்பதில் இருந்து கொஞ்சம் விலகியே இருந்து வந்த அவர் தற்போது மீண்டும் திரைப்படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார் .
இந்த நிலையில் பார்வையற்ற தம்பதியினரையும் அவரது இரண்டு பெண் குழந்தைகளையும் இமான் மற்றும் அவரது இரண்டாவது மனைவியான எமிலி தத்து எடுத்து இருக்கிறார்கள் .
Also Read : அவ வாழ்ந்த வீட்டில் நான் கால் வைக்கமாட்டேன் – நாக சைதன்யாவுடன் சோபிதா சண்டை!
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இசையமைப்பாளர் இமான் தொண்டு நிறுவனத்தை நடத்தி அதில் ஏழை எளிய வறுமையால் வாடும் பல மக்களுக்கு தங்களது உதவிகளை செய்து வருகிறார் .
தற்போது இரண்டாவது மனைவியுடன் பல உதவிகளை செய்து வருகிறார் . அந்த வகையில் பாலு மற்றும் அவரது மனைவியான ஷீபா என்ற தம்பதியினர் இரண்டு பேருக்குமே பார்வையில்லை.
ஆனால் அவர்களுக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளுள் பார்வையுடன் நலமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பெற்றோர்கள் அந்த குழந்தைகளை எப்படி வளர்ப்பார்கள்? என எண்ணி இமான் அந்த இரண்டு பெண் குழந்தைகளையும் தத்தெடுத்துள்ளார்.
இனி நான் தான் அப்பா என நம்பிக்கை கூறியுள்ளார். மேலும் இரண்டாவது குழந்தையின் பிறந்தநாளில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.