பருமனான உடல் தோற்றத்தை வைத்துக்கொண்டு Fatman என மக்களிடையே பிரபலமானவர் தான் ரவீந்தர் இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் பிக் பாஸ் விமர்சகராகவும் இருந்து வந்தார்.
இதனுடையே சீரியல் நடிகை ஆன மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்ட ரவீந்தர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் .
அதில் அவரது உடல் உருவம் குறித்த கேலி கிண்டலுக்கு உள்ளான ரவீந்தர் அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் என்றே சொல்லலாம் .
இதனிடையே மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்றார்.
ஆனால் ஒரு வாரத்திலேயே உடல்நலம் சரியில்லாமல் அந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் ரவீந்தர் இருக்கும்போது பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலமான அருணை வைத்து படம் எடுக்கப் போகிறேன் எனக் கூறி வந்தார்.
அதற்கு பதிலடி கொடுத்த பாலாஜி ரவீந்தர் அருணை ஏமாற்றி வருகிறார். என்னை வைத்து படம் பண்ணுகிறேன் என சொல்லி ஒன்றை வருடமாக வீணடித்து விட்டார்.
அவரால் நான் மற்ற படங்களில் கூட கமிட் செய்ய முடியாத அளவுக்கு என்னுடைய காலத்தையும் என்னையும் ஏமாற்றி விட்டார்.
Also Read : இடுப்பு பிடிக்க நான் என்ன வடக்கனா? ஹீரோயின் மேல் கை படாமல் POSE கொடுத்த சூர்யா!
ஆம் அதாவது பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களை வைத்துக்கொண்டு ரவீந்தர் சொன்ன கதை என்னை வைத்து படம் எடுக்க போவதாக அறிவித்த மார்கண்டேயனும் மகளிர் கல்லூரியும் படம் தான்.
இந்த படத்தோட கதையை சொல்லி என்னை ஏமாத்திட்டீங்க இப்போ அருனிடம் அந்த கதையை சொல்லி அவரது வாழ்க்கையை முடிக்க பார்க்கிறார் என பாலாஜி முருகதாஸ் ட்வீட் போட்டு இருக்கிறார்.
இந்நிலையில் பாலாஜிக்கு பதிலடி கொடுத்திருக்கும் ரவிந்தர் என்னால ஒரு பட வாய்ப்புக்காக பாலாஜி ஒன்றரை வருஷம் சும்மா இருந்தேன் சொல்றதெல்லாம் வெறும் பொய்.
உண்மையா சொல்லணும்னா எல்லாத்தையும் தாண்டி நடிப்பு அப்படின்னு ஒன்னு இருக்கு. எனக்கு அந்த கடவுளே நாக்குல நாலு பக்கம் எழுதினாலும் நாலு சீன் அவனுக்கு வராதுன்னு எனக்கு நல்லா தெரியும் .
ரிவ்யூ என்பது ரெஸ்பான்சிபிலா பேசுறது இஷ்டத்துக்கும் பேசுறது கிடையாது. கன்டென்டுக்கு என்ன விட்டா ஆள் இல்லைன்னு எனக்கே தெரியும் . வயிற்று பிழைப்புக்காக நான் பேசத்தான் செய்யணும் என பாலாஜி பதிலடி கொடுத்திருக்கிறார்.