தென்னிந்திய சினிமாவில் ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடியதன் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் டிஸ்கோ சாந்தி.
இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவராக பார்க்கப்பட்டார்.
இவர் நடிகர் சி எல் ஆனந்தின் மகளும் நடிகை லலிதா குமாரியின் சகோதரியும் ஆவார். மலையாள திரைப்பட நடிகராக மோகன்லாலுடன் கதாநாயகியாக நடித்த படம் பாதியில் நின்று போனது.
அதன் பின்னர் ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு வாய்ப்பு வந்ததால் ஊமை விழிகள் திரைப்படத்தில் நடனமாடிய ராத்திரி நேரத்து பூஜையில் என்ற பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமானது .
இன்று வரை அந்த பாடலுக்கு தனி மவுஸ் இருக்கிறது. அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமாகினார். தொடர்ந்து நிறைய படங்களுக்கு ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் ஆடும் வாய்ப்பினைப் பெற்றார் டிஸ்கோ சாந்தி.
இவன் சிறீஹரி என்பவரை 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2013 ஆம் ஆண்டு அவரது கணவர் இறந்து விட்டார் .
இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் இருந்தார்கள். அவர்களும் இருந்து விட்டனர். இந்த இந்நிலையில் கணவரின் மரணம் குறித்து டிஸ்கோ சாந்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது என் கணவர் மறைந்த பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் அவரது சமாதியில் தான் நான் படுத்து கிடப்பேன்.
அங்கேதான் அமர்ந்து தண்ணி அடிப்பேன். தினமும் காலையில் சென்று இரவில் அவரது சமாதியில் இருந்து விட்டு வருவேன்.
மறுநாள் காலை தான் வருவேன். ஆனால் இப்போ விழாக்களுக்கு மட்டும் தான் நான் அங்கு சென்று வருகிறேன் என டிஸ்கோ சாந்தி தனது கணவனின் மரணம் குறித்தும் அவரது பிரிவு குறித்தும் மிகுந்த வேதனையோடு பேசி இருக்கிறார்.
ஒரு ஐட்டம் நடிகை தன்னுடைய கணவர் மீது இவ்வளவு காதலில் இருந்துள்ளதை அவரது ரசிகர்கள் கேட்டு ஆச்சரியப்பட்டு. அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.