மும்பையை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயின்களில் ஒருவராக 2000 காலகட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் ஜெனிலியா.
இப்போது வரைக்கும் ஜெனிலியாவுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் மிக அதிகம் என்று சொல்லலாம்.
2003 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
அந்த திரைப்படம் ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அதை அடுத்து ஹிந்தி சினிமாக்களில் அதிக கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வந்தார்.
விஜய் நடிப்பில் சச்சின் திரைப்படத்தில் ஷாலினி என்ற கேரக்டரில் நடித்த ஜெனிலியாவுக்கு அந்த திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை கொடுத்தது.
எப்போதும் திரைப்படங்களில் குறும்புத்தனமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகையான ஜெனிலியாவுக்கு அது வொர்க் அவுட் ஆகியது என்று சொல்லலாம்.
குறிப்பாக அதுதான் அவரது அடையாளமாகவும் பார்க்கப்பட்டது. அப்படித்தான் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த சந்தோஷப்பிரமணியம் திரைப்படத்தில் ஹாசினி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் .
இன்று வரை ஹாசினி என்றால் டக்குனு ஜெனிலியா ஞாபகத்திற்கு வந்து விடுவார். அதுமட்டுமில்லாமல் பல இளைஞர்கள் எல்லோரும் ஹாசினி போன்ற ஒரு பெண் வேண்டும் ஜாலியாக வாழ்க்கை நடத்த என இப்போதும் கனவு காண்பதெல்லாம் இருக்கத்தான் செய்கிறது.
இதையும் படியுங்கள் : கக்கா போக கூட விடமாற்றங்க… கதறி அழுத ஸ்ருதிகா – இந்தி Bigg Boss’ல் கொடுமை!
மேலும் உத்தம வில்லன், வேலாயுதம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வந்த ஜெனிலியா தெலுங்கு மற்றும் அதிக படங்களில் நடித்து அங்கு பிரபலமான நடிகையாக இடம் பிடித்தார் .
இதனிடையே ஹிந்தி சினிமாவில் பிரபலமான இளம் ஹீரோவாக பார்க்கப்பட்டு வந்த ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் .
திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகும் ஜெனிலியா தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வத்தை செலுத்தி வருகிறார் .
இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜெனிலியா ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
ஜெனிலியா கிட்டத்தட்ட 37 வயசாகியும் கூடிய இப்போ வரைக்கும் பாக்குறதுக்கு அப்படியே இருக்காங்களே அந்த குறும்புத்தனம் இப்போ வரைக்கும் போகவே இல்லை என பலரும் கமெண்ட் செய்து இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.