தமிழ் சினிமாவில் பிரபலமான குணசித்திர நடிகராகவும் நகைச்சுவை நடிகராகவும் ஒரு காலத்தில் இருந்து வந்தவர் தான் தேங்காய் ஸ்ரீனிவாசன் அவரது பேத்தி தான் நடிகை ஸ்ருதிகா.
2002இல் நடிகை சூர்யா கதாநாயகனாக நடித்து வெளிவந்த ஸ்ரீ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை.
வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த ஆல்பம் திரைப்படத்தில் கூட சுருதி கார் நடித்திருந்தார். இது தவிர மலையாளத்தில் சொப்பனம் கொண்டு துலாபாரம் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
அந்த படமும் சொல்லிக் கொள்ளும்படி அவருக்கு பிரபலத்தை கொடுக்கவில்லை. ஜீவா நடிப்பில் வெளிவந்த தித்திக்குதே திரைப்படத்திலும் கமலஹாசன் தயாரிப்பில் உருவான நல்ல தமயந்தி உள்ளிட்ட திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
இருந்தாலும் இவர் நடித்த எந்த திரைப்படமும் பெரிதாக ஓடவில்லை. அட்டர் பிளாப் ஆகிவிட்டது. இதனால் இவர் அடையாளம் காணக்கூடிய நடிகை என்ற லிஸ்டிலேயே இல்லை.
இதனிடையே பிரபல தனியார் youtube சேனல் ஒன்று நடத்திய நேர்காணலில் பங்கேற்ற ஸ்ருதிகாவின் கலகலப்பான பேச்சு ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தையும் ஈர்க்க ஓவர் நைட்டில் பிரபலமானார்.
இதையும் படியுங்கள் : கக்கா போக கூட விடமாற்றங்க… கதறி அழுத ஸ்ருதிகா – இந்தி Bigg Boss’ல் கொடுமை!
பின்னர் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் அவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இந்த நிலையில் தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 18 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.
அந்த நிகழ்ச்சியில் ஸ்ருதிகாவின் கலகலப்பான பேச்சும் நடவடிக்கையும் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
நாளுக்கு நாள் ஸ்ருதிகாவின் பேச்சால் டிஆர்பி அங்கு அங்கு எகிறி வருகிறது. சில பல டார்ச்சர்கள் இருந்தாலும் அதையும் தாண்டி ஸ்ருதிகா தன்னுடைய கலகலப்பான பேச்சாளல் அதை மறக்கடிக்க செய்து விடுகிறார் .
அந்த வகையில் தற்போது தனது கணவருடன் நடந்த முதல் இரவு அனுபவத்தை குறித்து பேசி இருக்கிறார். அதில் மிகவும் மோசமாக இப்படியெல்லாம் கூடவா பேசுவது என்று முகம் சுளிக்கவில்லை பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.