பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் சில குறிப்பிட்ட மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் தற்போது 8வது பிக்பாஸ் சீசன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதே போல 18வது சீசனாக இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி அதே நாளில் தொடங்கப்பட்டது. இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான மவுசு உண்டு.
அப்படித்தான் இந்த முறை நடந்த பிக்பாஸ் சீசனில், தமிழ் நடிகையும் குக்வித் கோமாளி டைட்டில் வின்னருமான ஸ்ருதிகா பங்கேற்றார்.எப்போது துருதுருவென, சிரித்துக் கொண்டே அனைவரையும் மகிழ வைப்பவர், சுட்டித்தனமாக சேட்டைகளை செய்து பார்வையாளர்களை தன் வசப்படுத்தும் அவரின் பண்புக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் சல்மான் கான், ஸ்ருதிகாவை அறிமுகப்படுத்தும் போது பிரபல தமிழ் காமெடி நிகழ்ச்சியோட டைட்டில் வின்னர் இவங்கதான் என கூறினார்.
இதைக் கேட்ட ஸ்ருதிகா, சார் நான் தமிழ் படங்களில் கதநாயகியாக நடிச்சிருக்கேன். ஆனா அந்த நாலு பாடும் பிளாக் பஸ்டர் ப்ளாப் என ஸ்ருதிகாசிரிக்க, இதைக் கேட்டு சல்மான் சிரிக்க.. அரங்கமே சிரித்தது.இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த தமிழ் ரசிகர்கள் ஸ்ருதிகாவின் க்யூட்டான செய்கையை ரசித்து வருகின்றனர்.