தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். ஏராளமான படங்களில் நடித்துள்ள விஜய் தற்போது அரசியல் பிரவேசத்தில் நுழைந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என கட்சி பெயர், கொடி அறிமுகம் செய்தார்.
குறிப்பாக வரும் 2026 தேர்தலில் களமிறங்க முடிவு செய்துள்ள விஜய், வரும் 27ஆம் தேதி தனது முதல் மாநாட்டை நடத்துகிறார். இதற்கான பணிகள் வெகு விரைவாக நடந்து வருகிறது.
இதனிடையே சமீபகாலமாக விஜய் தனது மனைவியுடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்தே வந்தார். ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் சங்கீதா வராதது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அதற்கேற்றவாறு விஜய் பங்கேற்ற எந்த நிகழ்ச்சியலும், விழாவிலும் சங்கீதா வராதது உண்மை என உறுதி செய்யப்பட்டது. சில ஊடகங்களும், சங்கீதா விஜய்யை பிரிந்து லண்டனுக்கே சென்று விடடார் என செய்திகளையும் வெளியிட்டனர்.
ஆனால் இன்று முதலமைச்சர் ஸ்டாலினின் தங்கை கணவர் முரசொலி செல்வம் காலமானார். காலை முதலே அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் மனைவியாக சங்கீதா மறைந்த முரசொலி செல்வத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.