காதலே காதலே
2018 ஆம் ஆண்டு பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் “96”. முழுக்க முழுக்க விஜய் சேதுபதி, திரிஷா என இருவரை மட்டுமே மையப்படுத்திய கதையம்சம் கொண்ட இத்திரைப்படம் கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்த மிகச்சிறந்த காதல் திரைப்படமாக அமைந்துள்ளது.

திடீரென பரிசளித்த தயாரிப்பாளர்
இந்த நிலையில் “96” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாம். இந்த இரண்டாம் பாகத்தின் கதையை தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் பிரேம் குமார் கூறியிருக்கிறார். அவர் கூறிய விதம் ஐசரி கணேஷிற்கு மிகவும் பிடித்துப்போக, அடுத்த நாள் சர்ப்ரைஸாக பிரேம் குமாரை வரவழைத்து அவருக்கு 5 பவுன் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை கழுத்தில் போட்டு கையில் பல லட்சம் மதிப்பிலான கடிகாரத்தையும் கட்டிவிட்டாராம்.

இந்த செயல் பிரேம் குமாருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்ததாம். “நான் எவ்வளவோ திரைப்படங்களை தயாரித்து இருக்கிறேன். ஆனால் எந்த கதையும் கேட்கும்போதே இந்த கதை ஹிட் அடிக்கும் என நான் உணர்ந்ததே இல்லை. முதல்முறையாக இந்த கதைக்குதான் அப்படி உணர்ந்தேன்” என பாராட்டினாராம் ஐசரி கணேஷ். அந்த வகையில் இத்திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளாராம்.