இளம் நடிகர்
தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் மணிகண்டன். தனது தனித்துவமான நடிப்பால் தற்போதுள்ள இளைஞர்களை கவர்ந்துள்ள இளம் நடிகர் இவர். இவர் நடித்த “குட் நைட்”, “லவ்வர்” போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் இவரது கதை தேர்வு வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் இருப்பதால் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
50 ஹீரோ வரணும்
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் நடிகர் மணிகண்டன் தமிழ் சினிமாவின் போக்கை குறித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது மீண்டும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில், “வெறும் இரண்டு ஹீரோவை மட்டும் அடக்கி அடக்கி வைத்து தமிழ் சினிமாவை என்ன செய்து வைத்திருக்கிறோம் என்று சொல்கிறேன். மற்ற சினிமாத்துறையில் ஒரு புதிய அலையை உருவாக்குகிறார்கள். கிட்டத்தட்ட 12 ஹீரோக்கள் வருகிறார்கள்.

குறும்பட இயக்குனர்கள் பல பேர் இருக்கிறார்கள். 2000, 3000 கதைகள் இருக்கிறது. வெறும் 5 ஹீரோக்களை வைத்துதான் சினிமாத்துறை இயங்க வேண்டுமா? 40 ஹீரோ வேண்டும். 300 கோடி வசூல் தரும் நடிகர்களை வைத்து மட்டுமே தமிழ் சினிமா இயங்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே” என்று கூறியிருக்கிறார்.