வெற்றி திரைப்படங்கள்
2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதே நேரத்தில் பல கடுமையான விமர்சனங்களை பெற்ற பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. “கங்குவா” போன்ற திரைப்படங்களை இதற்கு உதாரணங்களாக கூறலாம்.
மேலும் இந்த வருடம் “லப்பர் பந்து”, “கருடன்” போன்ற சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் 2024 ஆம் வருடம் வெளிவந்த திரைப்படங்களை குறித்த முக்கியமான ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

சக்சஸ் ரேட் இல்லை…
“இந்த வருடம் அமரன், மகாராஜா ஆகிய திரைப்படங்கள் நல்ல வசூலையும் பாராட்டையும் குவித்தது. இத்திரைப்படங்கள் நீங்கலாக லப்பர் பந்து, கருடன், விடுதலை 2, சொர்க்கவாசல், டிமாண்டி காலனி 2, அந்தகன், லவ்வர் போன்ற பல நல்ல திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. ஆனாலும் பொதுவாக பார்த்தோமானால் சக்சஸ் ரேட் என்பது 15 சதவிகிதத்தை தாண்டவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்” என்று அவர் கூறியுள்ளார்.