சுமாரான வரவேற்பை பெற்ற ஷங்கர் படம்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான “இந்தியன் 2” திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு சரியாக போகவில்லை. “இந்தியன் 2” திரைப்படத்தின் சுமாரான வரவேற்பை தொடர்ந்து இயக்குனர் ஷங்கரின் “கேம் சேஞ்சர்” திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்தது.

“கேம் சேஞ்சர்” திரைப்படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் “கேம் சேஞ்சர்” திரைப்படமும் சுமாரான வரவேற்பையே பெற்றது.
ஒரு பாடலுக்கு 12 கோடி
ஷங்கர் திரைப்படங்கள் அதிகளவு பட்ஜெட்டில் எடுக்கப்படுபவை என்பது பலரும் அறிந்ததே. எனினும் அவரது திரைப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகள் முதற்கொண்டு அதிக செலவில் படமாக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் “கேம் சேஞ்சர்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் 12 கோடி செலவில் படமாக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்பாடல் திரைப்படத்தில் இடம்பெறவில்லை. இது சினிமா திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒரு சிறந்த உதாரணம்….
இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், “கேம் சேஞ்சர்” திரைப்படத்திற்காக ரூ.12 கோடி செலவில் படமாக்கப்பட்ட பாடல் இடம்பெறாதது குறித்து தனது வருத்தத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

“இப்போதுள்ள இயக்குனர்கள் எந்தளவுக்கு திட்டமிடாமல் ஒரு படத்தை உருவாக்குகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். இதனால் எத்தனை கோடி பொருள் நஷ்டம் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு ஏற்பட்டிருக்கும் என்று நினைத்து பாருங்கள். இப்படித்தான் இன்றைக்கு பல இயக்குனர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்” என்று தனது வருத்தத்தை அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.