கோலிவுட் 2024
2024 ஆம் ஆண்டு கோலிவுட்டில் பல முன்னணி கதாநாயகர்கள் நடித்த திரைப்படங்களுக்கு சுமாரான விமர்சனங்களே வந்தது. “GOAT”, “தங்கலான்”, “அயலான்”, “கங்குவா”, “ராயன்” போன்ற திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். எனினும் “அமரன்”, “லப்பர் பந்து”, “மகாராஜா”, “ப்ளூ ஸ்டார்” போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் முக்கிய வெற்றித் திரைப்படங்களாக அமைந்தன.

மோசமான ஆண்டு
இந்த நிலையில் திரைப்பட விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 241 தமிழ்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் 18 திரைப்படங்கள் மட்டுமே வெற்றிபெற்றுள்ளதாக திரைப்பட விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். இந்த 241 திரைப்படங்களையும் தயாரிக்க ரூ.3000 கோடி செலவாகியுள்ள நிலையில் இத்திரைப்படங்களுக்கு கிடைத்த சுமாரான வரவேற்பு காரணமாக ரூ.1000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.