தள்ளிப்போன விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவான “விடாமுயற்சி” திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் “விடாமுயற்சி திரைப்படம் சில காரணங்களால் பொங்கலுக்கு வெளிவராது” என்று லைகா நிறுவனம் அறிவித்த செய்தி ரசிகர்களின் தலையில் இடி விழுந்தது போல் ஆனது. “விடாமுயற்சி” திரைப்படத்திற்காக காத்திருந்த ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

பொங்கல் ரிலீஸ்
இந்த நிலையில் “விடாமுயற்சி” திரைப்படம் தள்ளிப்போனதால் ஒரு வரலாற்று சம்பவம் நிகழ உள்ளது. அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10 திரைப்படங்கள் வெளிவர உள்ளன. “வணங்கான்”, “கேம் சேஞ்சர்” போன்ற திரைப்படங்கள் ஏற்கனவே பொங்கல் பண்டிகைக்கு இடம்பிடித்து வைத்திருந்த நிலையில் சிபி சத்யராஜின் “Ten Hours”, ஜெயம் ரவியின் “காதலிக்க நேரமில்லை”, கலையரசன் நடித்த “மெட்ராஸ்காரன்”, சண்முக பாண்டியனின் “படை தலைவன்”, சுசீந்திரன் இயக்கிய “2K Love Story”, மிர்ச்சி சிவாவின் “சுமோ”, கிஷன் தாஸ் நடித்த “தருணம்”, விஷ்ணுவர்தன் இயக்கிய “நேசிப்பாயா” போன்ற திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.